நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்தப்பின்னர் ஓய்வு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து ஆய்வு செய்கிறேன் என்கிறார்கள், இது கண் துடைப்பு நாடகம், நீட் தேர்வு, உண்டா இல்லையா என முதல்வர் அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ராஜன் கமிட்டியை எதிர்த்து பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது, இதில் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி என்ன சொல்ல போகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்